உரிய முறையில் பணியாற்றாத அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது நடவடிக்கை
வடக்கில் இயங்கிவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி நிலைமை மற்றும் அந்த அமைப்புகள் வடபகுதி மக்களுக்கு வழங்கிவரும் நிவாரணங்கள் உரிய முறையில் மேற் கொள்ளப்படுகிறதா என்பது குறித்து எதிர்வரும் 16ம் திகதிக்குப் பின்னர் ஆராயப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பிரதேசங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவை தமது இலக்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
உரிய முறையில் பணிகளை மேற்கொள்ளாத அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply