தொடரும் கடத்தல்களால் திணறும் யாழ். மக்கள்
தொடரும் கடத்தல்களினால் யாழ்ப்பாணத்தில் மக்கள் திணறுவதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை மட்டும் அங்கு 2 கடத்தல்கள் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் பற்றி மேலும் தெரிய வருவதாவது: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒரு பெண் சிகிச்சை பெற்று, வெளியேற முற்பட்ட போது, அங்கிருந்த இருவர் முச்சக்கர வண்டியில் அவரை ஏற்றிச் செல்ல முற்பட்டனர்.
அவ்வேளை, அப்பெண் கூக்குரலிடவே, அங்கு கடமையில் இருந்த பொலிஸார், மற்றும் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியுடன் இருவரைப் பிடித்து யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றுமொரு சம்பவத்தில், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி ஒருவரை வெள்ளை வானில் கடத்த எடுத்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
நேற்று மாலை குறிப்பிட்ட மாணவி வீட்டிலிருந்து கார்த்திகேசர் வீதியினூடாக, தனது சித்தி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, வெள்ளை வானில் வந்தவர்கள் மாணவி அருகில் வானை நிறுத்தி அவரைத் தாக்கி வாயினுள் மருந்துப் பொருள் ஒன்றினையும் ஊற்றியுள்ளனர்.
அவ்வேளை அங்கு வந்த வயோதிபர் ஒருவர், சம்பவத்தை நேரில் பார்த்ததும் கூக்குரலிட்டார். அயலவர்கள் அப்பகுதிக்கு வரவே குறிப்பிட்ட மாணவியை கடத்தல்காரர்கள் விட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர். சம்பவத்தில் கடத்த முற்பட்டபோது காயமடைந்த மாணவி சண்முகதாஸ் அனுஸியா (வயது – 18) மந்திகை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply