புலிகளின் ஊடகங்கள் திரிபுபடுத்திய ஜெர்மன் பிராங்பேர்ட் நகரச்சம்பவம்

சிறீலங்காத் தூதரகத்தின் கண்காட்சிக்குச் சென்ற தமிழர் மீது கத்திக் குத்து மற்றும் கொலை வெறித் தாக்குதல் என்னும் தலைப்பில் புலிகளின் ஊடகங்கள் நேற்று முன்தினம் கத்தி குத்துச்சம்பவம் ஒன்றை பரபரப்பாக செய்திகளாக வெளியிட்டிருந்தன. புலிகளின் ஆங்கில செய்தி இணையமான தமிழ்நெற்றும் தலைப்புச்செய்தியாக வெளியிட்டிருந்தது.

டிசெம்பர் 5முதல் 7ந்திகதி வரை ஜெர்மனியில் உள்ள இலங்கைக்கான தூதரகம் 60வது சுதந்திரதின ஆண்டை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ஒன்றை பிராங்பேர்ட் புகையிரத நிலையத்திற்கருகாமையில் உள்ள சிறு மண்டபமொன்றில் ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 12மணிமுதல் மாலை 7மணிவரை இக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி நடைபெறுவதையறிந்த பிராங்பேர்ட் நகர புலிகள் இதற்கெதிரான ஒரு கண்டன எதிர்ப்பை இக்கண்காட்சி நடைபெறும் மண்டபத்திற்கு முன்பாக நடாத்தினார்கள். புலிகளினால் நடாத்தப்படும் பிராங்பேர்ட் தமிழலாயத்தைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகளவில் பங்குபற்றினார்கள். சுமார் 50பேர்வரை இந்தக்கண்டன எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தினர்.

புகைப்படக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த இலங்கைத்தூதரகத்தைச்சேர்ந்தவர்கள் கண்காட்சி ஆரம்பமான முதல்நாளன்று வருகை தந்த புலிகளின் உறுப்பினர்களை வரவேற்று தேனீர் கொடுத்து உரையாடினார்கள். கண்காட்சியில் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.. அதேசமயம் புகைப்படக்கண்காட்சிக்கு சென்ற தமிழர்களை வெளியில் நின்று கண்டன எதிர்ப்பை செய்து கொண்டிருந்த புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ஏசியதுடன் கண்காட்சிக்கு செல்லவேண்டாமென்று கூறினார்கள். எனினும் புலிகளின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது பல தமிழர்கள் கண்காட்சிக்கு சென்றிருந்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் எதுவித பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறவில்லை. முக்கியமாக கண்காட்சியில் பாதுகாப்புபிரிவினர் செயற்பட்டதுடன் பிராங்பேர்ட் காவல்துறையும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. ஆனால் புலிகளின் ஊடகங்களில் வெளியான செய்திதான் முரணபாடாக உள்ளதும் குழப்பமானதாகவும் உள்ளது.

1. கண்காட்சிக்கு 8மணியளவில் சென்று திரும்பிய கிருஸ்ணன் சின்னத்தம்பி என்ற தமிழர்களை சிங்களவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கண்காட்சி பிரசுரத்தில் 12.00மணி முதல் மாலை 7.00மணிவரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (பிரசுரத்தைப்பார்க்கவும்) அப்படியிருக்கையில் 8மணியளவில் கண்காட்சிக்கு சென்று திரும்பியவரை தாக்கியதாக செய்திவெளியிடப்பட்டுள்ளது.

2. கையில் காயத்திற்குள்ளான ஒருவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லாமல் அவரைப்புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். (படத்தைப்பார்க்கவும்) அப்படி அவரைப்புகைப்படமெடுக்கமுடிந்தவர்களால் ஏன் தாக்கியவர்களைப் புகைப்படமெடுக்கவில்லை.

3. ஜெர்மனியில் காவல்துறையினர் அழைத்த சில நிமிடங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விடுவார்கள். அப்படியிருக்கையில் ஏன் காவல்துறையினரை உடன் அழைக்கவில்லை.

4. சம்பவம் நடைபெற்ற ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய மருத்துவமனை உள்ளது. ஆனால் காயப்பட்டவர் 19கிலோ மீட்டர் தூரமுள்ள மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.

5. கையில் வெட்டுக்காயம் பட்டவரின் பெயர் கிருஸ்ணன் சின்னத்தம்பி என புலிகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் தாக்கப்பட்ட இன்னொரு நபர் பிராங்பேர்டில் புலிகளின் நிதி சேகரிப்பில் ஈடுபடுவரான சிவா என அழைக்கப்படும் ரவிராஜ் என்பவர். இவரைப்பற்றிய எந்தவொரு செய்தியையும் புலிகளின் ஊடகங்கள் வெளியிடவில்லை.

6. தங்களுக்கு சாதகமான சம்பவங்கள் என்றால் உடனுக்குடன் புகைப்படங்களாக செய்தி வெளியிடும் புலிகள் முதல்நாள் சிங்களவர்கள் வந்து குழப்பம் விளைவித்தவர்கள் என்றால் (அதுவும் 50 சிங்களவர்கள்)  புலிகளின் ஊடகங்கள் தெரிவித்ததுபோல கலந்து கொண்ட 300 தமிழர்களால் அதனை தடுக்க முடியவில்லையா?.

பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடாத்தவேண்டும். அத்துடன் புலிகளின் ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய நபரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உண்மை நிலமைகள் வெளிக்கொணரப்படவேண்டும். பிராங்பேர்ட் தமிழ்மக்களின் கருத்தின் படி இது புலிகளுக்குள் நடைபெற்ற சம்பவமாக கருதுகிறார்கள். புலிகளின் நிதிகேரிப்பாளர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பிராங்பேர்ட் நகர் அதுவும் புகையிரத நிலையத்திற்கருகாமையில் ஜனநடமாட்டம் அதிகமாகவுள்ள இடமொன்றில் ஒருவரை கத்தியால் குத்த வேடிக்கை பார்ப்பதும் பொலிசார் தாமதமாக வந்து விசாரணை மேற்கொண்டார்கள் என்பதும் நம்பமுடியாத ஒன்று. ஐரோப்பாவில் துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுப்பவர்கள் ஜெர்மன் பொலிசார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு புலிகள் குறிப்பிடுகின்ற எந்த சம்பவமும் புகைப்பட பதிவில்லாமல் காயப்பட்டவரை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று சிகிச்சையளிக்க முன்பு அவரைப் புகைப்படமெடுத்து உடனுக்குடன் செய்தி வெளியிடுவதைப் பார்க்கும்போது புலிகளின் செய்தி தொடர்பான சந்தேகம் அதிகமாகவே வலுக்கிறது. இதனை தீவிரமாக ஆராயமல் தலைப்புச் செய்தியாக போட்டிருந்த தமிழ்நெற்றை என்னவென்று சொல்வது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply