அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குத் கூட்டமைப்பு முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் : டக்ளஸ்

நீண்டகாலமாகத் தட்டிக்கழிக்கப்பட்டு வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இதேபோல, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமைந்த ,இலங்கை ,இந்திய ஒப்பந்தத்தை நடைறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால்.

 ஆயுதப்போராட்டத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் என்றும் ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதம் கோடிக்கணக்கான பொருட் சேதம், இடம்பெயர்வு, அகதி வாழ்க்கை போன்றவையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மிகவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கூடுதலான ஆசனங்களை நாங்கள் கைப்பற்றுவோம். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவிசெய்யக் காத்திருக்கிறோம். எமது இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல அன்றாடப் பிரச்சினைகளுக்கும் மிக விரைவில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply