புலிகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளது அரசாங்கங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது குறியீட்டு ரீதியாகவோ புலிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ரிவன்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் குறித்த முனைப்புக்களுக்கு ஆதரவளிப்பது ஆபத்தாதென சுட்டிக்காட்டியுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், மேற்குலக நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கையர்களுமே ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இயல்பு வாழ்க்கை நிலவுகின்றது என்பது வெளிப்பட்டு விட்டால் புகலிடம் கோரியவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால், பிரச்சினையை பெரிதுபடுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ம் ஆண்டு இராஜதந்திர பாதுகாப்பு மற்றம் தீவிரவாத நிலைமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து இரண்டு விடயங்களை கற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மிக வலுவான ஆயுத போராட்டக் குழுவொன்று தோற்கடிக்கப்பட்டமை மற்றும் மிக வலுவான வலைமைப்பை கொண்டிருந்தமை ஆகியன காரணமாக புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் வலுவான சர்வதேச வலையமைப்பை கொண்டுள்ளதாகவும் வேவ்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளிடம் இன்னமும் நிறைய பணம் இருக்கின்றது என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையமூடாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply