தென் அமெரிக்க நாடுகளில் புலிகளின் செயற்பாடு குறித்து இலங்கை கவனம்
தென் அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசூலாவில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்களை அடுத்து ஹவானாவிற்கான இலங்கைத் தூதுவர், வெனிசூலாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
தூதுவர் தமாரா குளியநாயகம் தற்போது வெனிசூலா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனினும், தூதுவர் மீண்டும் ஹவானா திரும்பியதன் பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான முழுத் தகவல்களையும் வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply