போர்க் குற்றம் குறித்து ஐநா விசாரிக்க வேண்டும் : ஹிலாரி

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார். ‘த பினன்சியல் டைம்ஸ்’ என்ற இணையத்தளத்துக்கு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். யுத்தம் நிறைவடைந்த பின்னர், அதன் காயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வினை முன்வைப்பதன் மூலம் அதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply