போர்க்குற்ற விசாரணைக்கு பிரிட்டனின் மூன்று கட்சிகள் அழைப்பு
இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கப் படைகள் புரிந்த படுகொலைகள் குறித்து சர்வதேச பக்கசார்பற்ற விசாரணைகள் அவசியம் என்று பிரிட்டனின் முக்கிய அரசியல் கட்சிகள் மூன்றைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்படுகொலைகளின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று முன்தினம், பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கிட்டத்தட்ட 10,000 பேர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் ஆளும் கூட்டணி அரசில் பங்கெடுக்கும் பழமைவாதக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்து வன்னிப்போரில் இலங்கை ராணுவத்தினர் 40,000 பொதுமக்களைப் படுகொலை செய்ததற்குத் தமது கண்டனத்தை வெளியிட்டதோடு முறையான விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். (நன்றி) இதேவேளை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை முற்றுமுழுதாக ரத்துச் செய்தும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியைத் தடுத்தும் சர்வதேச சட்டத்தை தாங்கிப்பிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடும் மனுவொன்றை பிரிட்டிஷ் தமிழர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பாராளுமன்றில் கையளித்தனர். இந்த மனு பிரிட்டன் அரசாங்கத்துக்கு எழுதப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply