லைலா புயல் தாக்கம் : தென்னிந்தியாவில் 23 பேர் பலி
லைலா புயலின் தாக்கத்தால் தென்னிந்தியாவில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலின்வேகம் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றராக இருப்பதால் கரையோரப் பகுதி மக்களிடையே பீதி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத்திலிருந்து தென்கிழக்கிலிருந்து சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பபட்லா நகரில் 9 அடி உயரத்தில் அலைகள் மேலெழுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புயலினால் கடந்த புதன்கிழமை முதல் 23 பேர் பலியாகியுள்ளதுடன் 55 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.1977 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இதேபோன்ற சூறாவளி ஏற்பட்டதன் விளைவாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply