ததேகூ உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாம் செல்ல அனுமதி மறுப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 12 நாடாளுமனற உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாமைப் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று காலை விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பு தரப்பினர் உள்ளே செல்ல அனுமதிக்காது, சுமார் ஒரு மணிநேரம் முகாம் வாயிலில் காக்க வைத்து விட்டுத் திருப்பி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுடன் இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்த போதும், பாதுகாப்பு தரப்பினர் தமக்கு அனுமதி வழங்க மறுத்ததாக சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்தார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மன்னார் நோக்கிச் செல்வதாகவும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட விஜயத்திற்கான அனுமதியை ஏற்கனவே அரசாங்கத்திடம் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply