ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கம்
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழுவினர், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையாளர் கிறிஸ்டலினா ஜோர்வியாவிடம், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
போர் முடிவுறுத்தப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் கணிசமானளவு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். மனித உரிமையை மேம்படுத்தும் நோக்கில் தேசிய திட்டமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை திருப்திகரமான முறையில் அமைந்துள்ளது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு முன்னேற்றமான நிலை காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply