மன்னாரில் மீள் குடியேற்றம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டு அது தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராயும் உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று(24.05.2010) மன்னாரில் இடம் பெற்றிருக்கின்றது. மன்னாரின் மாந்தை மேற்கு மடு மற்றும் முசலி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வருபவர்களில் கனிசமானோர் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் மீள்குடியேறும் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது தொடர்பான உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று (24.05.2010) மன்னார் மாவட்ட அரச செயலகத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

இன்றைய கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் வெர்னாண்டோ, உதவி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதூர்தின், ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான நூர்டீன் மசூர் மற்றும் குனைஸ் பாரூக் ஆகியோரும் மன்னார் அரசதிபர் உள்ளிட்ட அணைத்து பிரதேச செயலாளர்கள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை, மௌலவி அசிம் ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply