மன்னார் உப்புக்கூட்டுத்தாபணத்தின் அதிகாரிகள் மூவருக்கும் விளக்க மறியல் நீடிப்பு

மன்னார் உப்புக்கூட்டுத்தாபணத்தின் அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அ.யூட்சன் இன்று உத்தரவிட்டிருக்கின்றார்.மீதான நீதிமன்ற விசாரணைகள் இன்று 24ம் திகதி; மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இடம் பெறுகின்றது. மன்னார் உப்பளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்ததல்ல என கிடைக்கப்பட்டிருக்கும் இரசாயன அறிக்கையின் அடிப்படையில்   மேற்படி அதிகாரிகள் மூவரும் இம்மாதம்; 22ம் திகதி கைது செய்யப்படடிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்; தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றதத்pல் எடுக்கப்பட்ட போதே விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட நீதவான் அ.யூட்சன் குறித்த அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ம்; திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ம் திகதி மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்படி கூட்டுத்தாபணத்தினால் தயாரிக்கப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்தவையல்ல எனும் வாதத்தை முன்வைத்து மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பில் 22 வகையான மாதிரிகளும் இரசாயண பகுப்பாய்விற்காக பொது சுகாதார பரிசோதகர்களினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட உப்பு மாதிரிகள் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய அணுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆய்வின் இரசாயண பகுப்பாய்வு அறிக்கை இம்மாதம்; 21ம் திகதி (21.05.2010) கிடைக்கப்பட்டதை அடுத்து கூட்டுத்தாபணத்தின் பொது முகாமையாளர், உற்பத்தி முகாமையாளர், உதவி உற்பத்தி முகாமையாளர் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தனர்.

மனித நுகர்விற்கு உகந்ததல்லாத உப்பு தொடர்பாக கூட்டுத்தாபணத்தின் குறித்த மூன்று அதிகாரிகளும் இன்று (24.05.2010) மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகி நீதவானின் விசாரணையின் போது விளக்கம் அளிக்கையில் குறித்த உப்பு உற்பத்தி கருவாடு பதனிடுவதற்கு பாவிக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர். இதன் போது குறிக்கிட்ட மாவட்ட நீதவான் அ.யூட்சன் மனித நுகர்விற்கு உகந்ததல்லாதது என சொல்லும் போது அது கருவாடு பதனிடுவதற்கு பாவிக்கப்பட்டாலும் அதுவும் மக்கள் நுகர்விற்கானதே என கடுமையாக சாடியிருக்கின்றார்.

இதனிடையே குறித்த உப்புக்கூட்டுத்தாபணத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களிடமும்  விசாரணைகளை நடத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.கடந்த வருடம் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சுமார் 1450 மெற்றிக்தொண் எடையுடைய உப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவை இரசாயண பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்படுவதற்கு முன் மக்கள் நுகர்விற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply