யுத்த பாதிப்புக்குள்ளான மக்களின் மனதை அரசினர் வெல்ல வேண்டும் : அர்ஜூன
இராணுவ வெற்றிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை வெல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. ஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் நியாயமானவை தான். அதனை பிழை என நான் கூறவில்லை. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களின் மனதை வெல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறில்லையெனின் இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றவையாகவே இருக்கும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply