நாட்டின் புனர்நிர்மாண பணிகளில் புலம் பெயர் தமிழர் உதவ வேண்டும்: ஜீ. எல். பீரிஸ்
இலங்கையின் புனர்நிர்மாண செயற்பாடுகளில் புலம் பெயர் தமிழர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு விஜயம் செய்தார். அங்கு இருந்து பி. பி. சிக்கு அவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு புலம் பெயர் தமிழர்களிடம் கேட்டுக் கொண் டார். இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது.
அத்துடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் மீள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களும் தமது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டதாக பி. பி. சி. தெரிவித்துள்ளது.
புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமி ழர்கள் இவ்விடயத்தில் செய்ய வேண்டிய பெறுமதியான வேலைகள் நிறையவே உள்ளன. அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒரு உந்து சக்தி தேவை. எனவே வடக்கு, கிழக்கு மக்க ளுடன் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
யுத்த த்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சில பிரதேசங்களை கட்டியெழுப்ப ஒரு வித பொருளாதார மறுமலர்ச்சி தேவைப் படுகிறது என்று அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறியுள்ளார். இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனை வாஷிங்டனில் வைத்து சந்தித்து பேசவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply