அமெரிக்கா மனித உரிமை பேணலில் மாத்திரம் கவனம் செலுத்துவது நியாயமானதல்ல-ஜி.எல்.பீரிஸ்

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகம்கொடுத்து வரும் இவ்வேளையில் அமெரிக்கா மனித உரிமைகள் பேணலில் மட்டும் கவனம் செலுத்துவது நியாயமானதல்ல என்று இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிவில் யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் கழிந்த நிலையில், இலங்கைக்கும் அமெரிக் காவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி நிலைப்படுத்துவதற்கான சூழ்நிலை இன்னமும் சாதகமாக இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை பேணல் தொடர்பான செயற்பாடுகளுக்கு நாங்கள் எந்தவகையிலும் எதிரானவர்கள் அல்ல. அது எவருக்கம் புரியும். அது குறித்து நாங்கள் முரண்படவில்லை. என்று அமைச்சர் பீரிஸ் சர்வதேச ஆய்வுகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார் என்று ஏஎவ்பி செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவுடனான உறவுகள் ஒருதலைப்பட்டசமானதாக இருக்கக் கூடாது என்பதையே நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து செய்வதற்கான பல விடயங்கள் உண்டு என்றும் அவர் கூறினார். அமைச்சர் பீரிஸ் தேர்தலுக்குப் பினன்னரும் யுத்தத்திற்குப் பின்னரும் இடம்பெற்ற சில விடயங்கள் தொடர்பாக ஆற்றிய உரையை அடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றின் போது சில குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக வெளியான செய்திகள் குறித்து சர்வதேச நெருக்கடிகள் குழுவினதும் சர்வதேச மன்னிப்பு சபையினதும் பிரதிநிதிகள் பிரஸ்தாபித்தார்கள்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் போதும் நாட்டின் உட்கட்டமைப்பை புனரமைக்கும் போதும் அமெரிக்க கம்பனிகள் இலங்கைக்கு வந்து இந்த நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடலாம் என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை தாம் அமெரிக்க மூத்த உறுப்பினர்களையும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்தித்ததாக தெரிவித்த அமைச்சர் அடுத்த இரு தினங்னகளில் அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறினார். அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் கிழக்கு ஆசிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் நாளை வெள்ளிக்கிழமை அவரையும் அமைச்சர் சந்திக்க இருக்கிறார்.

பல தசாப்தகால யுத்தத்திலிருந்து மீண்டுள்ள இலங்கையில் புதிய அரசாங்கம் மக்களிடம் பெற்றுக் கொண்ட ஆணையை பயன்படுத்தி அது சமாதான நடைமுறை ஒன்றை ஆரம்பிக்க வேணண்டும் என்று கிளின்டனின் பேச்சாளர் பிலிப் குறோலி கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார். தேர்தலில் அரசாங்கம் குறிப்பிடத்தக்கதொரு வெற்றியை பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply