உண்மையான பௌத்தர்களாக நாம் வாழ வேண்டும் : பிரதமர் வாழ்த்து
புனித வெசாக் தினத்தில் உண்மையான பௌத்தர்களாக, அறவழியினைச் சரியாக இனம் கண்டு, அந்தப் பாதையிலே பயணிப்பதற்கு மும்மணிகளினதும் ஆசீர் மக்களுக்குக் கிட்ட வேண்டும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர்,
“பிரதமர் மற்றும் புத்த சாசன சமய விவகார அமைச்சர் என்ற வகையில் வெசாக் பௌர்ணமி தினத்தில், உலக மற்றும் இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு வாழ்த்துச் செய்தியினை வெளியிடக் கிடைத்தமையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். இம்முறை வெசாக் பண்டிகையை, கொள்கைளை மதிக்கக் கூடிய பௌத்தர்களாக மகளை உருவாக்குவதற்கான உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நினைவுகூர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
சொல்லால் மட்டுமின்றி செயலாலும் உன்மையான பௌத்தர் என்பதை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இன, மத, குல, வகுப்பு என பேதங்கள் அனைத்தையும் துறந்து கருணைமிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்கான உத்தம பணி ஒன்றே தற்போது எம்முன் உள்ள முக்கிய சவாலாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் பயங்கரவாதப் பிடியிலிருந்து தாய் நாட்டை மீட்டெடுத்து ஒரு வருடப் பூர்த்தியுடன், வெசாக் கொண்டாடப்படுகிறது. வெசாக் பண்டிகையை வடக்கு கிழக்கிலும் மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply