உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழியை நிறைவேற்றும்
இறுதிக் கட்ட யுத்தம் தொடாபிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த ஆணைக்குழு யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தி தண்டனை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டு மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமையப் பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஹிலரி கிளின்ரன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply