இன்று சர்வதேச புகைத்தல்-மது ஒழிப்புத் தினம்

இன்று சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ‘ போதையற்ற கிராமங்கள் எமது தாய் நாட்டுக்குப் புகழாகும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்றைய நாள் நினைவுகூரப்படுகிறது. இலங்கை சமுர்த்தி அதிகார சபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து இன்று 31 ஆம் திகதி முதல் ஜூன் 13 ஆம் திகதி வரை புகைத்தல்-மது எதிர்ப்பு தின நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு புற்று நோய் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான காரணியாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 வீதமானோர் நடுத்தர, குறைந்த வருமானம் பெறுபவர்கள் எனவும் கூறப்படுகிறது.

பலவிதமான புற்றுநோய்களுக்கு புகைப் பழக்கத்தை ஒதுக்குவதே மிகப்பெரிய தனியொரு தற்காப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. அதேவேளை 2030 ஆம் ஆண்டு புகைத்தல் காரணமாக 12 மில்லியன் பேர் உயிரிழக்கப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

அதே போன்று மது பாவனையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதன் மூலமும் ஏராளமான நோய்களுக்கு மதுப் பிரியர்கள் உள்ளாக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறிகின்றன.

இவை இரண்டும் மனித வாழ்வுக்கு ஊறு விளைவிப்பவை என்பதால், அவற்றை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இன்றைய நாளில் வலியுறுத்தப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply