நவம்பர் மாதத்தில் ஓமந்தை ஊடாக 95 சடலங்கள் பரிமாற்றம்: ஐ.சி.ஆர்.சி.

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக 95 சடலங்களைப் பரிமாற்றியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
 
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்குமிடையில் வன்னியில் தொடர்ந்தும் நடந்துவரும் மோதல்களில் இரு பக்கத்திலும் கொல்லப்பட்ட 95 பேருடைய சடலங்களை நவம்பர் மாதம் பரிமாற்றியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

நவம்பர் மாதத்தில் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக 3,900 பொதுமக்கள் பயணித்திருப்பதுடன், 445 நோயாளிகள் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டிருப்பதுடன், 730 வாகனங்கள் பயணித்திருப்பதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மோதல்களில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் மாட்டியிருக்கும் பொதுமக்கள் மருத்துவத் தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்குத் தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. அத்துடன், இடம்பெயர்ந்தவர்களுக்கு மனிதநேய உதவிகள் வழங்கப்படவேண்டியுள்ளது. இதற்கு ஏதுவாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நாளாந்தம் களநிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் குழுவின் தலைவர் பௌல் கஸ்ரெலா கூறினார்.

ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக 268,000 பேர் பயணித்திருப்பதுடன், 32,000 வானங்கள் பயணம் செய்திருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply