மக்களின் பிரச்சினைகளை விவாதிப்போம் கூட்டமைப்பின் தலைவர்: ஆர் சம்பந்தர்
இலங்கையில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜனாதிபதியுடன் தாம் வலியுறுத்தப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் திங்கள் கிழமையன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு இதுவாகும். வன்னிப் பிரதேசத்தில் தாம் மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின்போது கண்டறிந்த விடயங்கள் தொடர்பான அறிக்கையையும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் என்றும் ஆர் சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது. ஆனால் இந்த இரு விடயங்களுக்கும் தொடர்வில்லை என்று கூறும் சம்பந்தர், ஐனாதிபதியுடன் பேசத் தயார் என்று தேர்தல் முடிந்த பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின்போதே தாம் தெரிவித்திருந்தாக குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply