அரசுடனான பேச்சுக்களில் நம்பிக்கையுண்டு கூட்டமைப்பு அறிவிப்பு
அரசுடனான பேச்சுக்கள் நம்பிக்கை தரக்கூடியதாக இருந்ததாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி பா.அரியநேத்திரன் இன்று தெரிவித்தார். இச்சந்திப்பபு அலறி மாளிகையில் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸ தலைமையில் அமைச்சர்களான பசீல் ராஜபக்ஸ,நிமால் சிறிபாலடிசில்வா,டலஸ் அழகப்பெரும,மைத்திரிபால சிறிசேன உட்பட ஒன்பது பேர் பங்கு பற்றியிருந்தனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்மந்தர் எம்.பி தலைமையில் வினோதாரலிங்கம் எம்.பி தவிர 13எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
இப்பேச்சுக்களின் போது தமிழ அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை ஒழுங்கு முறைப்படி மீள் குடியேற்றுதல் ஆகியன குறித்து முக்கியமாக பரஸ்பரம் பேசப்பட்டுள்ளது. இப்பேச்சுக்கள் நம்பிக்கை தருவனாக அமைந்தன என்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடாபாக இரண்டாம் கட்ட பேச்சுக்கள் மிக விரைவில் நடைபெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.எம்.பி. பா.அரியநேத்திரன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply