நாட்டை ஒன்றிணைக்க எம்மால் முடிந்துள்ளது: ஜனாதிபதி
நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பயணத்தில் சகலரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்கள் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை வைப்பதுடன் எதிர்காலங்களில் இதைவிட அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் முன் னெடுக்கப்படுவது அவசியமென தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடங்களில் எத்தகைய நிலையிலும் கட்சியை விட்டுச் செல்லாதவர்கள் தொடர்பில் மகிழ்ச்சியுறுவதாகவும் தெரிவித்தார்.
கல்வி, விவசாயம், சுகாதாரம் என எத்துறையானாலும் பிரச்சினைகள் வரும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் மட்டுமே அதற்காகக் குரல்கொடுக்கும் நிலை மாறி, கட்சி ரீதியில் குரல்கொடுப்பதற்கு முன்னிற்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.லங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடை பெற்றது.
பிரதமர், சபாநாயகர், மாகாண ஆளு நர்கள், அமைச்சர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள கட்சியின் செயற்குழு அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சிறப் பாகக் கட்டியெழுப்பி அதனைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்பு இக்காலத்தில் எமக்குக் கிடைத்து ள்ளது. அதற்கு கட்சியின் செயற் குழுவினதும் நாட்டு மக்களினதும் பங்களிப்பு அளப்பரியது. நாம் தலைமைத்துவம் வழங்கி னாலும் செயற்பாட்டுப் பொறுப்பு கட்சியில் சகலருக்கும் உரியது. அத்தகைய அர்ப்ப ணிப்புள்ள செயற்பாட்டைக் கெளரவித்தே விருது வழங்குவதற்கான தீர்மானத்தை கட்சி மேற்கொண்டது.
கட்சியின் முன்னாள் தலைவர்களான எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்றோர் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தினர். இதன் மூலம் கட்சியைப் பலமானதாகக் கட்டியெழுப்பினர்.
இந்த வகையில் கடந்த கால தேர்தல்களில் சகல மட்டத்திலும் பங்களிப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அமைப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் கட்சி தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது. அதற்காக இலங்கையின் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையில் முதல் தடவையாக அத்தகையோருக்குப் பாராட்டையும் கெளரவத்தையும் வழங்குகிறது.
கடந்த காலங்களில் சகல தேர்தல்களிலும் வெற்றிபெற்ற அமைச்சர்கள் நம்மிடையே உள்ளனர். பிரதமர் டி. எம். ஜயரத்ன, அதாவுத செனவிரத்ன போன்றோர் இதில் குறிப்பிடக் கூடியவர்கள்.
கட்சியைப் பாதுகாப்பதற்காக சிறைசென்ற அனுபவங்களும் எமக்குண்டு. அக்காலத்தில் தோல்வியின் பிரதிபலிப்பை நாம் நன்குணர்ந்துள்ளோம். சகல கஷ்டங்களையும் அனுபவித்தே நாம் கட்சியைப் பாதுகாத்து கட்டியெழுப்பியுள்ளோம். தேர்தல் காலத்தில் மட்டுமன்றி சகல சந்தர்ப்பங்களிலும் கட்சியைப் பலப்படுத்துவது அவசியம். அதற்கான செயற்பாடுகளை அமைப்பாளர்கள் முன்னெடுப்பது அவசியம்.
எத்தகைய சூழ்நிலையிலும் நாம் குழப்பமடைந்து கட்சியைவிட்டு போக ஒருபோதும் எண்ணியதில்லை. நாம் கட்சியைப் பாதுகாத்தால் கட்சி நம்மைப் பாதுகாக்கும் என்பதையே நான் அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்த நிலையை மாற்றி நாட்டை மீட்டு சுதந்திரமாக்குவதற்கு எம்மால் முடிந்துள்ளது. இதன் மூலம் வடக்கு கிழக்கையும் தெற்கையும் எம்மால் ஒன்றிணைக்க முடிந்துள்ளது. எனினும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
நாம் யுத்தம் மட்டும் செய்யவில்லை. அத்தோடு நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தினோம். துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் என நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பல்வேறு அபிவிருத்திகளை எம்மால் முன்னெடுக்க முடிந்துள்ளது.
எமது செயற்பாடுகளுக்குத் தடைபோடும் சக்திகளை எதிர்கொள்ளவும் நேர்ந்தது. ஜீ. எஸ். பி. சலுகையைத் தடைசெய்வது மனித உரிமை மீறல் விவகாரமென இப்போதும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவோர் உள்ளனர். இப்போது அயல் நாடுகள் மட்டுமன்றி மேற்கத்தைய நாடுகளும் எமக்கு உதவுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுப்பது முக்கியம்.
நூற்றிற்கு எழுபது வீதம் என வெற்றி பெற்றவர்களுமுள்ளனர். அதேபோன்று நூற்றுக்கு 7 வீதம் என வாக்குப் பெற்றவர்களும் உள்ளனர். எப்போதும் மக்கள் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து செயற்படுவது அவசியம். இது மக்களது கட்சி. கட்சியைப் பாதுகாத்து புதியவர்களையும் இணைத்துக் கொண்டு மக்களுக்கான சேவையை வழங்குவது அவசியம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply