மியன்மார் எதிர்க்கட்சி தலைவி விடுதலை செய்யப்படவேண்டும்: ஒபாமா
மியன்மார் எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூகி மற்றும் அவரது ஆதரவளர்களை விடுதலை செய்ய மியன்மார் படைத்துறை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஆங் சான் சூகியின் தனது 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த 15 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
மியன்மார் படைத்துறை அரசின் மனித் உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அதன் மீது பொருளாதார தடைகளை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்தாகும்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply