யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நாடக விழாவிற்கு எதிர்ப்பு

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ள நாடக விழாவிற்கு தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் களரி நாடகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நாடக மற்றும் இசை விழா 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வன்னி மக்கள் இழந்த சொந்தங்களுக்காக கண்ணீர் வடிக்கும் தருணத்தில் இவ்வாறான ஓர் விழா அவசியமானதா என ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் களரியினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நாடக இசை விழா ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வன்னி மக்கள் இன்னமும் மீளவில்லை எனவும், நாடகக் குழுவினர் வன்னிக்குச் சென்று மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஓராண்டு கழிந்துள்ள போதிலும் வன்னி மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை என ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களும் நிம்மதியாக உறங்காத நிலையில், களியாட்டங்கள் அவசியமானதான என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதேச மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதன் பின்னர் நிகழ்வினை ஒழுங்கு செய்திருக்க வேண்டுமென அவர் விழா ஏற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply