முன்னாள் பெண் போராளிகளுக்கு இன்று முதல் வேலைவாய்ப்பு
புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக் கொண்ட முன்னாள் பெண் புலிப் போராளிகள் 400 பேருக்கு இன்று முதல் ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் உள்ள இரண்டு புனர்வாழ்வு முகாம்களில் இவர்கள் பயிற்சிகளை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பஸ்களில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு படையினரின் தடுப்புக் காவலில் இருந்து இவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கவும் குறித்த தொழிற்சாலை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
400 பெண் போராளிகளும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் தங்க வைக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கணினி, அழகுக் கலை, மின்சார தொழிற்நுட்பம், கட்டிட நிர்மாணம் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply