அமெரிக்கா புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக்கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சாமாதான மற்றும் சட்ட ரீதியான அடிப்படையில் கூட குறித்த அமைப்புக்களுக்கு உதவிகளை வழங்கக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான ஒர் கருவியாக இந்தத் தடைகளை ஒபாமா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், தடை செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அமைப்புக்களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழங்க முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டமை ஆபத்தானது என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாத அமைப்புக்களின் கடும் போக்குடைய தன்மை உக்கிரமடையக் கூடுமென அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கப்படும் நிதி, ஆலாசனை, தொழில்நுட்ப உதவிகளை தடை செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதவான் குழாம் ஆறுக்கு மூன்று என்ற வாக்கு கணக்கில் நிராகரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply