பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லாது தேசிய அரசாங்கமொன்றை நிறுவ ஜனாதிபதி முழுமையான ஆதரவு

ஜனாதிபதியின் பூரண விருப்பத்துடன் தேசிய அரசாங்கமொன்றை நிறுவது தொடர்பான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டு வருகிறார். இதன் ஆரம்பமாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சசுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வினவியபோது, இனப்பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வொன்றைக் கண்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த நிலையில் தேசிய அரசாங்கமொன்றை நிறுவி அதன் மூலம் இந்த இலக்கினை அடைய முடியும். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் தெளிவாக எடுத்துக் கூறினேன். இதற்கு அவர் பூரண சம்மதத்தை வழங்கியதுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லாது தேசிய அரசாங்கமொன்றை நிறுவதற்கான மக்கள் ஆணையைப் பெற்று அதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மூலம் இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமெனத் தாம் நம்புவதாக தெரிவித்த அமைச்சர் ராஜித, அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு குழுக்களையும் சந்தித்து இது தொடர்பில் பேசவுள்ளதாகதவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply