இலங்கைப் பிரச்சினையில் தலையிடுமாறு பில் கிளின்டனிடம் கோரிக்கை

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை தலையிடுமாறு கோரப்படவுள்ளது. இது தொடர்பில் நியூயோர்க் தமிழ் சங்கம் விரைவில் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனை சங்கத்தின் தலைவர் செல்லத்துரை அல்பர்ட் தெரிவித்துள்ளார். தமிழத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வாழ்கின்ற சிறிய அளவிலான தமிழ் சமூகத்தினர் சங்கம், பல தசாப்தங்களாக காணப்படுகின்ற இலங்கை தமிழகர்களின் பிரச்சினை தொடர்பில் செயற்பட்டு வருகிறது..

இதன் படி, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, உரிய வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் நாட்களில் பில் கிளின்டனை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் அவலநிலை காணப்படுவதாகவும், வலிகளில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு அவசர கதியில் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply