இலங்கை மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்: அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அடிப் படையானதென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply