பெற்றோரை இழந்த 149 சிறுவர்கள் செட்டிக்குளம் முகாமில் தஞ்சம்

வன்னியில் இடம்பெற்ற போரினால் பெற்றோரை இழந்த 149 சிறுவர் சிறுமியர் வவுனியா, செட்டிக்குளம் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு வயதுகளை உடைய சிறுவர் சிறுமியர் இவ்வாறு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆண்டு சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் 30 மாணவ மாணவியரும் இந்த முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பத்து மாதங்களுக்கு முன்னர் பெற்றோரை இழந்த 225 பிள்ளைகள் குறித்த முகாமில் தங்கியிருந்ததாகவும், இதில் 86 குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply