ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை:முதல்வர் கருணாநிதி

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிவடைந்தையொட்டி கோவையில் இன்று செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். அப்போது மாநாடு சிறப்பாக நடத்த உதவியவர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்டர்வர்களுக்கும் முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி: செம்‌மொழி மாநாட்டையொட்டி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக ‌ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்: கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிக்கவில்லை. அரசு அறிவிக்காம‌லேயே அந்த அம்மையார் யாரை நம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் என தெரியவில்லை.

கேள்வி: மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படுமா?

பதில்: மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது நிச்சயமாக மக்கள் கருத்து கேட்கப்படும்.

கேள்வி: அடுத்த செம்மொழி மாநாடு எப்போது நடைபெறும்?

பதில்: ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக ஜப்பானில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பு கோரப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply