புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல
புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய வெதவல நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இராணுவப் பேச்சாளராக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார் அத்துடன் இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராணுவ பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் உபய மெதவல இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளையிடும் தளப தியாக செயற்பட்டு வந்தார். இராணுவத்தின் கவச பிரிவைச் சேர்ந்த இவர் சிறந்த மொழியாற்றல் உடையவர்.
மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் 08ம் திகதி முதல் இரண்டாவது தடவையாக இராணுவ பேச்சாளராக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply