சர்வதேச நாணய நிதியம் 3ஆம் கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க தீர்மானம்

சர்வதேச நாணய நிதியம் மூன்றாம் கட்ட கடனுதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் சர்வதேச நாணய நிதியம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் , மூன்றாம் கட்டமாக இலங்கைக்கு 407.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உடனடியாக வழங்கப்படவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூன்றாம் கட்டத்தை வழங்கும் செயன்முறை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply