அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து குறித்து ஐ.நா அவதானம்

நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து தமது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ள நிபுணர்கள் குழுவானது, இலங்கை இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும்.

ஐ.நாவின் இந்த நடவடிக்கையினை ஆரம்பத்திலேயே களைய வேண்டும். கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் உள்ள எந்தவொரு அதிகாரியையும் வெளியே செல்ல விடாது மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நாம் நடத்துவோம் என அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றை கடந்த வாரம் நியமித்திருந்தார். இந்த நிபுணர் குழுவானது இலங்கையின் இராணுவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்துவதற்கான தடயங்களைத் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவாகும் என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply