ஐ.நா நிபுணர் குழு தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு சரியானதே

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு மெத்தச் சரியானதென சீனா அறிவித்துள்ளது.யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான வீசாரணைகளை நடத்த இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான தகுதி இலங்கையிடம் காணப்படுவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
 
இலங்கையின் உள்விவகார சூழ்நிலையை ஸ்திரப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சீனா குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும், அதன் மக்களும் உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய இயலுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குன் காங் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய புறச்சூழலை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply