இன, மத நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் ஜனாதிபதி அதிர்ச்சி; கவலை
இன மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது. இஸ்லாமிய மதத் தலைவர் நியாஸ் மெளலவியின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவர் ஜனாதிபதி ஆலோசகராக மட்டுமன்றி நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
அவருக்கு எனது கெளரவ அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக பணிப்பாளராக நீண்டகாலமாக பதவி வகித்து இஸ்லாமிய இளஞ் சந்ததியினருக்கு அவர்செய்த சேவையை நான் கெளரவத்துடன் நினைவுகூருகிறேன். இஸ்லாமிய மதம் தொடர்பான அவரது அறிவு, அனுபவங்கள், திறமைகளை அவர் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக உபயோகித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர் ப்பதற்கு அவரது அர்ப்பணிப்பு மகத்தானது.
இஸ்லாமிய மதத்தின் புனித நூலான திருக்குர்ஆன் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருந்த அவர் இந்நாட்டிலுள்ள ஏனைய மதங்கள் பற்றிய தெளிவையும் கொண்டு விளங்கினார்.இன, மத, குலங்களுக்கப்பால் மனிதத் தன்மையை மதிக்கும் அவர், சகல மதத்தவரதும் அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். மனித நேயத்தைக் கொண்டவர்களுக்கே இத்தகைய கெளரவம் கிடைக்கின்றது. இந்நாட்டில் இன, மத, குலபேதமின்றி அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.
இந்த வகையில் நியாஸ் மெளலவியின் மரணத்தை ஒரு அன்புமிக்க நண்பனின் பிரிவாகக் கருதுவதோடு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன் எனவும் ஜனாதிபதி தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply