ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் கிளர்ந்தெழுந்துள்ளன.

ஐ.நாவின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கையின் விருப்பத்துக்கு மாறாகவும், ஐ.நாவின் மனித உரிமைகள் சபை, பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஆணையைப் பெறாமலும் நிபுணர் குழுவை அமைத்தமை மூலம் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெருந்தவறு இழைத்து விட்டார் என்று அவை துள்ளிக் குதிக்கின்றன ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் இந்நாடுகள் அடுத்த வாரம் ஐ.நா செயலாளரிடம் இது தொடர்பாக உத்தியோகபூர்வமான முறையில் எழுத்துமூலம் ஒருமித்து விளக்கம் கோர உள்ளன.

ஐ.நா செயலாளரிடம் சமர்ப்பிக்கவென இந்நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் மனுவின் மாதிரி இந்நாடுகள் ஒவ்வொன்றினதும் பார்வைக்காக இந்நாடுகளிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணிசேரா நாடுகளின் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஐ.நா சபையும் நன்றாகவே அறிந்து உள்ளது. இதனால் ஐ.நா சபையும், செயலாளர் நாயகம் பான் கீ மூனும் மிகுந்த குழுப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு எதிரான அணிசேரா நாடுகளின் நகர்வுகள் குறித்து அறிந்துள்ளார் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இம்மனுவைச் சமர்ப்பிக்கின்றமை தொடர்பாக அணிசேரா நாடுகளிடையே பரஸ்பரம் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை அறிவார் என்றும் ஆனால் அவை ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனவா? என்பது குறித்துத் தெரியாது என்றும் ஹக் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply