புலிகளுக்கு நிதி, வாகனங்கள் வழங்கிய பொலிஸ் உயரதிகாரி உட்பட மூவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உயரதிகாரி மேல் மாகாண விசேட பொலிஸ் செயற்பாட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிப்பவராவார். ஏனைய இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.
கைதுசெய்யப்பட்ட இவர்கள், கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர்களிடம் கப்பம் பெறல், ஆட்கடத்தல், வானக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட வாகனங்களைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இவர்கள் அனுப்பி வைத்தமையும் வர்த்தகர்களிடம் பெறப்படும் கப்பத்தில் ஒரு பகுதியைப் புலிகளுக்கு வழங்கி வந்தமையும் ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூவரும் கொழும்பு பெரும்பாகப் பொலிஸ் பிரிவிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் கைது தொடர்பான தகவலை உறுதிப்படுத்திய பொலிஸ் வட்டாரங்கள் மேலும் சில பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் புலிகளுக்குமிடையே சம்பந்தமிருக்கலாமென சந்தேகிப்பதாகத் தெரிவித்ததுடன் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவரெனக் கூறியது.
கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply