சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் கைது!
இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டன.இந்தச் சம்பவத்தையடுத்து கடத்தலோடு தொடர்புடைய 2 இலங்கை வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடத்தல் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சுற்றுலா விசாவில் வந்திருந்த 2 வாலிபர்களின் பெட்டிகளை சோதனை போட்டனர். அந்தப் பெட்டிகளில் ஒன்றும் இல்லாததால் அவர்களை போகச்சொல்லி விட்டனர்.
அந்த 2 வாலிபர்களும் விமான நிலையத்தை விட்டு வெளியே நடந்துசென்றபோது அவர்கள் தாண்டித் தாண்டி வித்தியாசமாக நடந்து சென்றனர். இதை பார்த்த அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் பிடித்து வந்து தனி அறையில் வைத்து சோதனை போட்டனர். அப்போது அவர்கள் இருவரும் தலா 5 தங்க பிஸ்கட்டுகளை ஆசன வாயிலில் வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அவர்களிடமிருந்த 1 1/2 கிலோ எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளை ஆசன வாயிலில் இருந்து எடுத்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.28 லட்சமாகும்.
பிடிபட்ட அந்த இலங்கை வாலிபர்களிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியபோது இலங்கையில் வேலை இல்லாமல் இருந்ததாகவும், அப்போது ஒருவர் தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து இதை ஆசன வாயில் வைத்து சென்னைக்கு எடுத்து செல்லுங்கள், உங்கள் புகைப்படங்களை நாங்கள் மின்னஞ்சலில் சென்னையில் உள்ள ஒருவருக்கு அனுப்பி விடுவோம். அவர் விமான நிலையத்தில் வந்து உங்களை சந்திப்பார். இதற்காக உங்களுக்கு தலா. ரூ.10 ஆயிரம் தருவார்கள் என்று கூறியதால் தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.பிடிபட்ட இலங்கை வாலிபர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த தங்க கடத்தலில் ஈடுபட்ட சென்னை கும்பலை பிடித்தபின் இதுபற்றிய முழு விவரங்களை வெளியிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தங்க கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே விமானத்தில் வந்த 8 பேர்களிடம் விமான நிலைய பொலிஸார் சோதனை நடத்தியபோது அனுமதி இல்லாமல் அவர்கள் ரூ40 லட்சம் மதிப்புள்ள மெமரி கார்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் செல்ல இருந்த முகமது ஆரீப் (வயது 36) என்பவரை அதிகாரிகள் சோதனை போட்டபோது அவரிடமிருந்து 6 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் பிடிபட்டது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதை தொடர்ந்து முகமது ஆரீப்புக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply