மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட உயிருடன் இருக்க முடியாது: சீமான்

இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் எத்தனை சிங்களவர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் நேற்று நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் தொண்டர்கள், பிரபாகரன் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், சீமான் ஆவேசமாக பேசுகையில்,

ஐ.நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள். இது வரை 500 மீனவர்கள் சிங்களவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply