2020ம் ஆண்டளவில் 20 பில்லியன் ஏற்றுமதி வருமானம்
இலங்கையின் ஏற்றுமதி வருமான இலக்கான 20 பில்லியன் டொலர்களை 2020ம் ஆண்டளவில் அடைவதற்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் ஜானக்க ரத்நாயக்கா, டாக்டர் மறைக்கார், மொஹான் அத்துக்கொரல ஆகியோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது அமைச்சர் ரிஷாத் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் ஏற்றுமதித் துறையில் 7 பில்லியன் டொலர் வருமானம் பெற்றிருப்பதாகவும் இத்தொகை மிகவும் குறைந்தளவாகக் காணப்படுகின்றது.
தற்பொழுது இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து அமைதி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி அபிவிருத்தி பிரதிநிதிகள் ஊடாக எமது ஏற்றும் பொருட்களை அந்தந்த நாடுகளில் பிரபல்யப்படுத்தி எமது இலக்கை அடைய வேண்டுமென்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply