அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது
வட பகுதியில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஒரு நாட்டிற்கு இவ்வாறு அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியம் எனவும் அமெரிக்காவில் கூட இவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் உள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டில் யுத்தம் நிலவிய போது இவ் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லாது இருந்தால் மேலும் பேராபத்துக்களை சந்திக்க நேரிட்டிருக்கு மெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply