நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 55பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
மேற்கு வங்கத்தில் நின்றிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 60 பேர் பலியாயினர். இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் இதுவரை 35 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு , தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஸ் கட்டர்கள் மூலம் ரயில் பெட்டிகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமுற்ற 150 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் பாகர்பூரில் இருந்து, வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் ராஞ்சிக் நோக்கி புறப்பட்டது. பீர்பூம் மாவட்டம் சாயிந்தியா ரயில் நிலையத்தில் நின்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்நேரத்தில் வந்த உத்தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்று அறியாத பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் சுமார் 50பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறை அமைச்சர் மம்தா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஒரே பிளாட்பாரத்தில் ரயில் வந்தது எப்படி : ஒரே பிளாட்பாரத்தில் நேருக்கு நேர் ரயில் வந்தது எப்படி இதற்கு காரணமானவர்கள் யார் உத்தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டிய தருணத்தில் மிக வேகமாக வந்ததாக அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மீட்பு பணியில் ராணுவம் : சம்பவம் நடந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 அதிகாரிகள் தலைமையில் 160 ராணுவ வீரர்கள் சென்றனர். விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் கூறுகையில்; இந்த சம்பவம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே சம்பவத்திற்கு முன்னாள் ரயில்வே துறை அமைச்சர்கள் லாலுபிரசாத் யாதவ் , ராமர்விலாஸ் பஸ்வான் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரயில்வேயின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply