ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி நாளை மக்கள் பேரணி : விஜித ஹேரத்

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனநாயக தேசிய முன்னணி நாளை மக்கள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாகக் கட்சியின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

“ஜனநாயக தேசிய முன்னணி , அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இவ்வாறான பல்வேறு போராட்டங்களை இதற்கு முன்னரும் முன்னெடுத்துள்ளது. இப்பேரணி 3 கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவித்தல், நீதித்துறையில் அரசாங்கம் தலையிடக்கூடாது மற்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்காத அரசியல் திருத்தம் அவசியமில்லை போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளது.

நாளை பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கெம்பல் பார்க்கில் ஆரம்பித்து லிப்டன் சுற்று வட்டாரம் வரை பேரணி நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply