மீள்குடியமர்த்தப்படாத தமிழர்களின் நிலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது : ரணில்
இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மீள்குடியமர்த்தப்படாத இலங்கை தமிழர்களின் நிலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, குடியமர்த்தப்படாத இலங்கை தமிழர்களின் நிலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது. கால விரயமின்றி தமிழர்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தும் பணி நடைபெற வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளோம். குடிபெயர்ந்த தமிழர்களில் எஞ்சிய 50 ஆயிரம் பேரை மீணடும் குடியர்த்தும் பணி நடைபெற்று வருவதாக அரசு எங்களிடம் தெரிவித்துள்ளது.
தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து, இரு நாட்டு அரசுகளும், இரு நாட்டு மீனவர்களும் அமர்ந்து பேச வேண்டும். தேவையற்ற உயிர் பலிகளை தவிர்க்க வேண்டும். இலங்கையில் போரால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கண்டறிய வரும் ஐ.நா. குழுவை அனுமதிப்பது குறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினராக இல்லை என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தியாவுக்கு பயணமானார். இந்திய அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் ஒருவாரம் இந்தியாவில் தங்கியிருப்பார். விக்ரமசிங்க, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய ஆட்சியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ரணில் இந்திய ஆட்சியாளர்களுக்கு தெளிவுப்படுத்துவார் என கூறப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply