புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! முன்னாள் கட்டளைத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன். இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா. அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
”நான் பிரபாகரனின் உயிரற்ற சடலம் சுமந்து செல்லப்படுகின்றமையை கண்டு கொண்டேன். அச்சடலம் காட்டு வழியாக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு இருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அச்சடலத்துக்குப் பின்னால் ஓடினேன். அது பிரபாகரனின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றேன். பிரபாகரனிடம் சொந்தத் துப்பாக்கியை தொட்டுப் பார்த்து பரிசோதித்தேன்.அவரது துப்பாக்கியின் ரகம்,அத்துப்பாக்கியின் சீரியல் இலக்கம் ஆகியன எனக்கு முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.
அவருடைய தகட்டு இலக்கம் 001.அது பிரபாகரன் உடையதுதான் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். வீட்டுக்கு வந்தேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply