கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார்
தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர.
புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்பு அமைச்சில் நேற்றுக்காலை நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியவை கூறியதாவது.சரணடைந்த புலிப் போராளிகள் சுதந் திரமாக நடமாடித் திரிகின்றனர். புலி முக்கியஸ்தர்கள் கூட கூண்டில் அடைத்து வைக்கப்படவில்லை. பிரபல நடிகை அனோஜா வீரசிங்க இவர்களுக்கு நடனப் பயிற்சியளித்து வருகிறார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.
சரணடைந்த புலிப்போராளிகளில் 2,000 பெண்களும் அடங்குவர். இவர்களில் 600 பேருக்குத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 364 பேர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர். கொழும்பில் உள்ள பிரபல ஆசிரியர்கள் இவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்றனர். பரீட்சைக்குப் பின்னர் இம்மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply