பெரியபண்டிவிரிச்சானில்; மக்கள் மீள்குடியேறிய பகுதியில் கிளைமோர்

பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் மீள்குடியேறிய பிரதேசவாசி ஒருவரின் வீட்டுவளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் வெடிகுண்டு இம்மாதம் 21ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நிலக்கன்னிவெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லையோ? என மீள்குடியேறிய மக்களிடமிருந்து அச்சம் வெளியிடப்படுகின்றது.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியில்; மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதியில் நிலக்கன்னிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கின்றனவா? எனும் சந்தேகம் ஏற்படுவதாக மீள்குடியேறியவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட பண்டிவிரிச்சான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், ஏனைய பகுதிகளிலும் உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்கள் தற்போது கட்டங்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பவர்களின் வீடுகளும் , கிணறுகள் மட்டும் துப்பரவு செய்யப்பட்டிருப்பதாகவும் வளவுகளோ சுற்று புறமோ துப்பரவு செய்யப்படாத நிலையில்  மக்கள் அப்பகுதிகளில் குடியேறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரியபண்டிவிரிச்சான் பாடசாலையில் தற்காலிகமாக தங்கியிருந்த மக்களுக்கு கூடாரங்கள் வழங்கப்பட்டதையடுத்து தமது சொந்தக்காணிகளில் துப்பரவுபணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.  இந்நிலையில் குறித்த தினம் (21.07.2010) மாலை குறித்தபிரதேசத்தில் பெண்னொருவர் துப்பரவுபணியினை மேற்கொண்டபோது வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் வயர்களால் இணைப்புச்செய்யப்பட்ட நிலையில் கிளைமோர் வெடிபொருள் காணப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சிக்குள்ளான மேற்படி குடும்பப்பெண் அருகில் உள்ள இராணுவ முகாமில் தகவல் கொடுத்திருக்கின்றார் இதனைஅடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் சோதனைநடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர் கன்னிவெடிகள் அகற்றும் குழுவினரின உதவியினை பெறும் வரையில் அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்குப்படி மேற்படி குடும்பத்தினர்க்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply