ஈழத் தமிழரின் வாழ்க்கை மீட்சி பெற இந்தியாவின் கடும் நடவடிக்கை தேவை
ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் படும் அவதிகளைக் களைந்து, அவர்கள் மீட்சி பெற, இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரி உள்ளார். இந்திய மத்திய அரசு எவ்வளவு வன்மையாக இலங்கையைக் கண்டித்து ஈழத் தமிழருக்குப் புதுவாழ்வு, வாழ்வுரிமை ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்கின்றமையில் முதல் நாடாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்கடையினரால் கொல்லப்படுகின்றமையைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைஅ எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ள அவர் தமிழர்களின் வாக்கினால் ஆட்சி அமைத்திருக்கும் மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை இரண்டையும் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இவற்றுக்கு எல்லாம் எப்படி, எப்போது தீர்வு காணப்போகிறது டில்லி அரசு? என்று கேட்கிற உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் அவர் குறிபிட்டுள்ளார். தமிழர்களின் குமுறல், அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply